TN TRB TET தேர்வு அறிவிப்பு 2022 – தகுதிகள், தேர்வு தேதி & முழு விவரங்களுடன்..

0
TN TRB TET தேர்வு அறிவிப்பு 2022 - தகுதிகள், தேர்வு தேதி & முழு விவரங்களுடன்..
TN TRB TET தேர்வு அறிவிப்பு 2022 - தகுதிகள், தேர்வு தேதி & முழு விவரங்களுடன்..
TN TRB TET தேர்வு அறிவிப்பு 2022 – தகுதிகள், தேர்வு தேதி & முழு விவரங்களுடன்..

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில் (TN TRB) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் (TNTET) பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamilnadu Teachers Recruitment Board (TN TRB)
பணியின் பெயர் Tamilnadu Teachers Eligibility Test (TNTET)
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.03.2022 TO 13.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

TNTET காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB) வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வானது (TNTET) பல்வேறு காலிப் பணியிடங்களுக்காக நடைபெற உள்ளது.

TN TRB கல்வித் தகுதிகள்:

TNTET Paper-1 தகுதி:

  • பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு உடன் Diploma (2-Year) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் B.Ed in Nursery Teachers Training of 2 years / BTC in Urdu / D.E.ED / B.ED டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (Teacher Training Institute) BTC / Diploma in teacher education / Diploma in elementary education தேர்ச்சி பெற்றவர்களுக்கு இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • Visually Challenged நபர்கள் மட்டும் இத்தேர்வுக்கு பதிவு செய்ய இயலாது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடலாம்.

மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்? வலுக்கும் கோரிக்கை!

TNTET Paper-2 தகுதி:

  • பதிவுதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் B.A / B.SC / B.Lit degree with Tamil / English / Maths / Physics / Botany / Zoology / History / Geography ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக படித்தவர்கள் பதிவு செய்ய தகுதியானவர்கள்.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் B.ED/ D.T.ED/ TPT அல்லது B.Lit (Tamil) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பதிவுதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் B.Ed / Diploma (2-Year) / (4-year) B.El.Ed / ஏதேனும் Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். கூடுதல் விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.TN TRB வயது வரம்பு:

இத்தேர்வுக்கு பதிவுதாரர்களுக்கு குறித்த பட்ச வயது வரம்பாக 18 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே பதிவுதாரர்கள் கட்டாயம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNTET விண்ணப்ப கட்டணம்:

General Category பதிவுதாரர்களுக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் SC / ST/ PWD வகுப்பைச் சேர்ந்த பதிவுதாரர்களுக்கு ரூ.250/- மட்டும் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புகைப்படத்தை மாற்றுவது எப்படி? முழு விவரம் இதோ!

TN TRB தேர்வு முறை:

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TNTET) தகுதியான மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் Paper-1 மற்றும் Paper-2 தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் Paper I: June 27, 2022. மற்றும் Paper II: June 28, 2022 தேர்வுகள் நடைபெறும் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

TNTET விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் நடத்தும் TN TET தேர்வுக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும் TET தேர்விற்கு விண்ணப்பிக்க 13.03.2022ம் தேதி முதல் 13.04.2022ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

TN TRB TET Exam 2022  Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!