மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்? வலுக்கும் கோரிக்கை!

1
மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்? வலுக்கும் கோரிக்கை!
மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்? வலுக்கும் கோரிக்கை!
மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்? வலுக்கும் கோரிக்கை!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கடந்த 2003ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. ஆனால் தற்போது பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்

பழைய ஓய்வூதிய திட்டம்

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பணிக்காலம் நிறைவடையும் போது ஓய்வூதிய தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்தது. இதனை கடந்த 2003ம் ஆண்டு மத்திய அரசு மாற்றி அமைத்து வெளியிட்டது. இதில் ஊழியர்கள் மாதந்தோறும் பெறும் சம்பளத்தின் ஒரு பகுதியை அவர்களின் PF கணக்கில் சேமிக்கப்படுகிறது. மேலும் இந்த தொகையுடன் அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை சேர்த்து செலுத்துகிறது. இதில் சேமிக்கப்படும் தொகையானது அவர்களின் பணிக்காலம் முடிவடையும் போது வழங்கப்படுகிறது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கர்ப்பமாக இருக்கும் முல்லை – அடுத்து வரப்போகும் திருப்பம்!

இந்த நடைமுறையால் தங்களுக்கு எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை என்று ஊழியர்கள் வருத்தம் தெரிவித்தனர். அதனால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். அதன்படி தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு மட்டும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, தமிழகத்தில் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளதால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது சந்தேகத்திற்குரியது.

அத்துடன் இதற்கான முடிவுகளை அரசு தனது கொள்கையை பொறுத்து எடுக்கும் என்றும் இது பற்றி எதுவும் தெரியாது எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தெரிவித்தாவது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பல்வேறு மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. It is easy to revise the pension according to their last pay drawn after having passed twenty years after introducing new pension scheme, only 25% of Salary may be paid to all govt. Employees who are completing 30 years and moreover as pension instead of 50% salary.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!