TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வு – 9494 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிப்பதில் சிக்கல்!

0
TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வு - 9494 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிப்பதில் சிக்கல்!
TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வு - 9494 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிப்பதில் சிக்கல்!
TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வு – 9494 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிப்பதில் சிக்கல்!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள 9494 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 14ம் தேதி முதல் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது விண்ணப்பப் பதிவு மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார்கள் கிடைத்துள்ளன. இதனை விரைந்து சரி செய்யுமாறு தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு

தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள் பணியிடத்தை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு 2 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. தற்போது அரசு பள்ளிகளில் 9494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியர் பணியிடத்திற்கான தேர்வு குறித்த திட்ட கால அட்டவணையை தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டது. அதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள் I மற்றும் தாள் II-க்கு மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்தது.

TCS நிறுவனத்தில் ரூ.7 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளம் மூலமாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இத்தேர்வுக்கு கடந்த மார்ச் 14ம் தேதி முதல் தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர்.

TN Job “FB  Group” Join Now

இதற்கு விண்ணப்பிக்க 12ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தேர்வர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 மதிப்பெண்கள் வரை சலுகை வழங்கப்படும். இந்நிலையில் இதற்கு விண்ணப்பிப்பதற்கான பக்கத்தில் இதற்கான சலுகை விபரத்தை தொழில்நுட்ப ரீதியாக தேர்வு வாரியம் குறிப்பிடவில்லை. அதனால் தேர்வர்கள் இட ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 மதிப்பெண்கள் உள்ளிட்ட சலுகையை பெற விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேர்வு வாரியம் உடனடியாக நடவடிக்கையை மேற்கொண்டு பிரச்சனை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!