TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வு 2022 – விண்ணபிக்க கால அவகாசம் வேண்டி கோரிக்கை!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், மேலும் 2 வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கையை தேர்வர்கள் முன்வைத்து வருகின்றனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
தமிழகத்தில் அனைத்து துறை அரசு பணிகளுக்கும் போட்டித் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது அதிக தேர்வர்கள் எதிர்பார்த்த குரூப் 2,2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அடுத்ததாக குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. அதனால் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் (TRB) காலிப்பணியிடங்கள் மற்றும் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வந்தது. கடந்த மாதம் 13ம் தேதி பட்டதாரி மற்றும், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது.
TN Job “FB
Group” Join Now
முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்கள் (D.T.Ed) இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர்கள் (B.ED) முடித்தவர்கள் தேர்வை எழுதலாம். முதல் மற்றும் இரண்டாம் தாளில் 150 வினாக்கள் இடம்பெறும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல், மொழிப்பாடம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். தற்போது இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவுகள் கடந்த ஏப்ரல் 13ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த விண்ணப்ப பதிவு காலத்தில் சர்வர் பிரச்சினை ஏற்பட்டதால் தேவர்கள் விண்ணப்பிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த சர்வர் பிரச்சனையால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. கடந்த காலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 7 லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருந்த நிலையில், இம்முறை சுமார் 4 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை விண்ணப்பங்கள் குறைவாக வந்துள்ளதால் மேலும் 2 வாரங்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. 18-ஆம் தேதி முதல் இரு வாரம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.