TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு – நாளை நிறைவு!

0
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு - நாளை நிறைவு!
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு - நாளை நிறைவு!
TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு – நாளை நிறைவு!

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு 12ம் தேதி தொடங்கிய நிலையில், நாளை கணினி அறிவியல் பாடப்பிரிவிற்கு தேர்வு நடைபெற இருக்கிறது. இத்துடன் எழுத்து தேர்வுகள் முடிவடைகிறது.

நாளை நிறைவு:

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கு 2,207 பேரை நியமிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்துகிறது. இந்த நிலையில் போட்டித்தேர்வு பிப்ரவரி 12 முதல் 15-ம் தேதி வரை முதல் கட்டமாகவும், பிப் 16 முதல் 20ம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் நடத்தப்படுகிறது. இந்த கால அட்டவணைப்படி தேர்வு கடந்த 12ம் தேதி முதல் தொடங்கியது. பி.எட், எம்.எட்., படித்த வெளி மாவட்டங்களில் வசிக்கும் பட்டதாரிகள் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – பேச்சுப்போட்டி அறிவிப்பு!

மேலும் தேர்வர்கள் முகக்கவசம் அணிவது, கொரோனா தடுப்பூசி போட்ட சான்று வைத்திருப்பது, தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது குறிப்பிட்டிருந்த அடையாள அட்டையின் அசல் எடுத்துச் செல்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருவதால் இன்று முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு இன்று நடைபெறவில்லை. ஏனென்றால் அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Post Office செல்வ மகள் சேமிப்பு திட்டம் – பயன்கள், சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்!

மேலும் நாளை காலை (பேட்ஜ்-7) கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கு தேர்வு நடைபெறுகிறது. இதற்கு மாவட்ட நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு மைய நுழைவு சீட்டு ஆகியவற்றை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வகையில் நாளையுடன் (20 ம்தேதி) தேர்வு முடிவடைகிறது. எழுத்துத்தேர்வு முடிவடைவதை அடுத்து இதுவரை நடந்த கேள்வி தாளுக்கான விடை குறிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!