தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – பேச்சுப்போட்டி அறிவிப்பு!

0
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - பேச்சுப்போட்டி அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு - பேச்சுப்போட்டி அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – பேச்சுப்போட்டி அறிவிப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 25ம் தேதி பேச்சுப் போட்டி நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி குறித்து அவர் செய்தி குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

பேச்சுப்போட்டி:

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கு பின்பு கடந்த 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டு வருவதால் விரைந்து பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. தற்போது மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வின் விடைத்தாள்களை திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரு வாரத்திற்குள் திருத்தி முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியை அடைந்த Work From Home – சர்வே முடிவுகள்!

அதனை தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தபட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.

Post Office செல்வ மகள் சேமிப்பு திட்டம் – பயன்கள், சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்கள்!

இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியே பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. இதில் பள்ளி மாணவர்களுக்கு பிப்ரவரி 25ம் தேதி காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை 04575-241487 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here