TN SET 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு – கல்வி, வயது, விண்ணப்பிக்கும் விவரங்கள் இதோ!

0
TN SET 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு - கல்வி, வயது, விண்ணப்பிக்கும் விவரங்கள் இதோ!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆனது 2024ம் ஆண்டுக்கென நடைபெறவுள்ள TN SET 2024 தேர்வு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலம் Assistant Professor பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாகவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் 01.04.2024 அன்று முதல் https://www.msuniv.ac.in என்ற இணையதளம் வாயிலாக பெறப்படவுள்ளது. இத்தகைய TN SET 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பின்வறுமாறு வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் தேர்வின் பெயர்: TN SET 2024
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2024
விண்ணப்பிக்கும் முறை Online

TN SET 2024 தேர்வு விவரங்கள்:

தமிழக கல்லூரிகளில் காலியாக உள்ள Assistant Professor பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் TN SET தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த வகையில் நடப்பாண்டுக்கான TN SET 2024 தேர்வுக்கான அறிவிப்பானது 20.03.2024 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தேர்வானது 03 ஜூன் 2024 அன்று முதல் 25 ஜூன் 2024 அன்று வரை நடைபெறவுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராஜினாமா? – வெளியான தகவல்!

TN SET 2024 காலியிடங்கள்:

இந்த தேர்வுக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

TN SET 2024 கல்வி:

இந்த Assistant Professor பணிக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் UGC அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, PG Diploma, Diploma + Master Degree, Ph.D முடித்தவராக இருக்க வேண்டும்.

TN SET 2024 வயது:

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

TN SET 2024 தேர்வு நடைபெறும் விதம்:

  • இத்தேர்வானது Paper I, Paper II என இரண்டு பிரிவுகளாக 03 மணி நேரத்திற்கு நடத்தப்படவுள்ளது.
  • Paper I தேர்வானது 50 MCQ வினாக்களை கொண்டு 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
  • Paper II தேர்வானது 100 MCQ வினாக்களை கொண்டு 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

TN SET 2024 விண்ணப்ப கட்டணம்:

  • General – ரூ.2,500/-
  • BC / MBC / DNC – ரூ.2,000/-
  • SC / ST / SC(A) / PwD (VI, HI, PH) – ரூ.800/-
  • Third Gender – விண்ணப்ப கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் விதம்:

இந்த TN SET 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் 01.04.2024 அன்று முதல் 30.04.2024 அன்று வரை https://www.msuniv.ac.in என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!