தமிழ்நாடு தலைமை செயலக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழக தலைமை செயலகத்தில் Personal Assistant பதவிகளுக்கான காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான இறுதி விண்ணப்பதிவு ஏப்ரல் 30 என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கடைசி தேதி அறிவிப்பு:
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில், தமிழ்நாடு செயலக சேவை பணிகளுக்கான காலியிடங்களை பூர்த்தி நிரப்ப புதிய அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. அதில் குறிப்பாக Personal Assistant பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் பட்டப்படிப்புகளில் 10+2+3 என்ற அடிப்படையில் எதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
மேலும் விண்ணப்பதாரர்கள் Steno-Typist Grade-ll பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும். மேலும் அரசு தொழில்நுட்ப தேர்வுகளில் தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.மேலும் சுருக்கெழுத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மே 1 முதல் விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!!
இந்த பணிகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.36,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,15,700/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை காணலாம்.