தமிழக பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையில் மாற்றம் ? – கல்வித்துறை தகவல்!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையில் மாற்றம் ? - கல்வித்துறை தகவல்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையில் மாற்றம் ? - கல்வித்துறை தகவல்!
தமிழக பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையில் மாற்றம் ? – கல்வித்துறை தகவல்!

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வுகள் தொடர்பான அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது கோடை விடுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

கோடை விடுமுறை:

2024 மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று 22 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதனால் தேர்தல் பணிக்கு ஏதுவாக ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் பள்ளிகள் அனைத்தும் தேர்தல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. எனவே ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் தேர்வுகள் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி அன்று ரமலான் பண்டிகை வர உள்ளதால் ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதி நடக்க இருந்த அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் முறையே ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதி நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் குழந்தைகளை பாதிக்கும் புட்டாலம்மை – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

இதனால் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தொடங்க இருந்த கோடை விடுமுறையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் 22 மற்றும் 23ஆம் தேதி பள்ளிக்கு வரவேண்டிய சூழல் உள்ளதால் கோடை கால விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த மக்கள் தற்போது பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 24ஆம் தேதிக்கு பிறகு தான் கோடை விடுமுறையில் சுற்றுலா அல்லது சொந்த ஊர்களுக்கு செல்லும் திட்டங்களை மக்கள் செயல்படுத்த வேண்டியுள்ளது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!