தமிழகத்தில் மின்தடை குறித்த முக்கிய அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!

0

தமிழகத்தில் மின்தடை குறித்த முக்கிய அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!

தமிழகத்தில் அதிகம் ஏற்பட்டு வரும் காரணத்தால் அதற்கு புகார் தெரிவிக்க மின் வாரியம் சார்பில் தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் மூலம் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மின்தடை புகார்கள்

தமிழகத்தில் தற்போது இருக்கும் நவீன டிஜிட்டல் உலகத்தில் ஒரு நொடி கூட மின்சாரம் இல்லாமல் மக்களால் இருக்க முடியாது. ஆனாலும் மின் தடை ஏற்படும் போது மக்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்று வருகின்றனர். இது போல சென்னை போன்ற பெரு நகரங்களில் மின்தடை ஏற்படும் போது ஒரு நாளுக்கு முன்னரே மின் வாரியம் சார்பில் அறிவிக்கபடும். தமிழ்நாட்டில் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.

தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளி நேரத்தை மாற்ற கல்வித்துறை முடிவு!

இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது தஞ்சை நகர கோட்டத்திற்குட்பட்ட பொதுமக்கள் மின்தடை மற்றும் இதர புகார்கள் குறித்து தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, மானோஜிப்பட்டி, ரகுமான் நகர், ரெட்டிபாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேலவெளி ஊராட்சி, தமிழ்ப் பல்கலைக்கழக குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் 9445853751 என்ற எண்ணிலும் புகார்களை தெரிவித்து கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளனர்.

மேலும் தஞ்சை நகரில் உள்ள சில பகுதிகளில் இருக்கும் மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கடம் நகர், இனாத்துக்கான் பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை, சிட்கோ, கருணாவதிநகரை சேர்ந்தவர்கள் 9445853761 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். சீனிவாசபுரம், கீழவீதி, தெற்கு வீதி, மேலவீதி, மேற்கு அலங்கம், கீழவாசல், பாம்பாட்டி தெரு, காந்திஜி சாலை, அண்ணா சாலை, நீதிமன்ற சாலை, சாந்தப்பிள்ளை கேட், கல்லணைக்கால்வாய் சாலை, ரயிலடி, பழைய பஸ் நிலையம் பகுதியை சேர்ந்தவர்கள் 9445853736 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும், மேலும் நகர உதவி செயற்பொறியாளர் 9445853732, செயற்பொறியாளர் 9445853731 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் மின் தொடர்பான புகார்களுக்கு 1912 மற்றும் 9498794987 மின்னகம் என்ற இலவச தொலைபேசி எண்ணை பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!