TN MRB தமிழக மருத்துவத்துறையில் ரூ.1,15,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TN MRB தமிழக மருத்துவத்துறையில் ரூ.1,15,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TN MRB தமிழக மருத்துவத்துறையில் ரூ.1,15,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TN MRB தமிழக மருத்துவத்துறையில் ரூ.1,15,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) காலியாக உள்ள இளநிலை ஆய்வாளர் மற்றும் இருட்டறை உதவியாளர் ஆகிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த அறிவிப்பு அடிப்படையில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 5 ஆகும்.

ரூ.1,15,700 சம்பளத்தில் வேலைவாய்ப்பு:

தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்ய மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) 2012 ல் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் அரசாணை மூலம் தோற்றுவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சுகாதாரத் துறையில் இளநிலை ஆய்வாளர்( 29) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் “Master’s Degree in Chemistry or Biochemistry or Microbiology or Dairy Chemistry or Food Technology, Food and Nutrition or Bachelor’s Degree in Technology in Dairy /Oil or Veterinary Sciences” படித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.36,400 – 1,15,700 வழங்கப்படும்.

தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?

இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 200 வினாக்களுடன் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு 2.30 மணி நேரம் ஆகும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 1000, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 500 ஆகும். இந்த வகையில் இருட்டறை உதவியாளர் (209) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Dark Room Assistant சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளமாக ரூ.19,500 – 62,000 வழங்கப்படும்.

மேலும் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, Dark Room Assistant சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் 20%க்கும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%க்கும், Dark Room Assistant சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, SC/SCA/ST/DAP பிரிவினருக்கு ரூ. 300 ஆகும். இந்த 2 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://mrbonline.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த 2 பணியிடங்களுக்கு 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ST / SCA/ SC/ MBC(V) / MBC&DNC/ MBC/ BCM /BC பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!