தமிழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மாதம் ரூ.75 ஆயிரம் ஊக்கத்தொகை!

0
தமிழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - மாதம் ரூ.75 ஆயிரம் ஊக்கத்தொகை!
தமிழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - மாதம் ரூ.75 ஆயிரம் ஊக்கத்தொகை!
தமிழகத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மாதம் ரூ.75 ஆயிரம் ஊக்கத்தொகை!

தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் முதல்வர் புத்தாய்வு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிப்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 75 ஆயிரம் வழங்கப்பட இருக்கிறது.

ஊக்கத்தொகை அறிவிப்பு

தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் தலைமையின் கீழ் படித்த பட்டதாரி இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி அதனை பயன்படுத்தும் வகையில் அரசு புத்தாய்வு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் முறை மற்றும் கல்வி அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சியை அரசு வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இளநிலை மற்றும் முதுகலை படித்த பட்டதாரிகளிடம் இருந்து வரவேற்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மாதந்தோறும் ஊக்கத் தொகையாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட இருக்கிறது.

மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஜாக்பாட் அறிவிப்பு!

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழக முதல்வரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் தொழில் முறை மற்றும் கல்வி அடிப்படையில் இளம் பட்டதாரிகளை தேர்வு செய்து ஊக்கத் தொகையுடன் 2 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவர்கள் மாநில அரசின் முதன்மை மற்றும் முன்னுரிமை திட்டங்களை செயல்படுத்துவதில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும், முதல்வர் அலுவலகம் சம்பந்தப்பட்ட துறைகளிலும் பணிகளை மேற்கொள்வார்கள். இதில், ஒரு துறைக்கு 2 பேர் என்ற அடிப்படையில் 24 பேர் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் கண்காணிப்பு மையத்திற்கு 6 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் ஆகியவற்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதே போல கலை மற்றும் அறிவியலில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழ் மொழி அறிவு கட்டாயமானதாகும். இந்த திட்டத்தை செயல்படுத்த திருச்சி பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது’ என்று குறிப்பிடப்படிருந்தது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 22 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயது வரையும், BC மற்றும் MBC பிரிவினருக்கு 33 வயது வரையும் தளர்வு இருக்கும்.

தேர்வு செயல்முறை:

ஆன்லைன் தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் இருக்கும்.

ஊக்கத்தொகை:

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் ஊக்கத்தொகை கிடைக்கும்.
மேலும் போக்குவரத்து, தொலைபேசி மற்றும் இணைய வசதிகளுக்கு ரூ.10 ஆயிரம் என்ற அடிப்படையில் மொத்தம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும்.

விண்ணப்ப முறை:

இந்த திட்டத்தின் கீழ் www.tn.gov.in/tncmfp அல்லது www.bim.edu/tncmfp என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை செலுத்தலாம். விண்ணப்பங்களை ஜூன் 10ம் தேதி வரை செலுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here