தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக தருமபுரி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தேவையான தகுதிகளை பற்றி பார்ப்போம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வாகன சீராளர் பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 01.07.2021 அன்று நிலவரப்படி 18 முதல் 37 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 15 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ஆரம்பம்!

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரர்கள் வாகனங்களை சுத்தம் செய்வது, பராமரிப்பது உள்ளிட்ட பணிகளை செய்யத் தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் நல்ல உடல் தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணியில் நியமிக்கப்படுவோருக்கு ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை வழங்கப்படுகிறது. மேலும் இதில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தருமபுரி மாவட்டம் – 636705 என்ற அஞ்சல் அலுவலக முகவரிக்கு வருகிற 16ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான தகவல்களை பெற நினைப்பவர்கள் https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2022/06/2022060185.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!