தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையோர் கவனத்திற்கு – இன்று முதல் வழங்கல்!

0
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையோர் கவனத்திற்கு - இன்று முதல் வழங்கல்!
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையோர் கவனத்திற்கு - இன்று முதல் வழங்கல்!
தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையோர் கவனத்திற்கு – இன்று முதல் வழங்கல்!

5 சவரனுக்கும் குறைவாக வங்கிகளில் அடகு வைத்திருக்கும் ஏழை எளிய மக்களின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக அரசு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது இன்று முதல் அந்த நகைகளை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி:

ஏழை, எளிய பாமர மக்களின் விவசாய கடன் மற்றும் நகை கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்வதாக சட்ட மன்ற தேர்தலின் போது திமுக கட்சியின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதன்படி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொன்னபடி பல திட்டங்களையும் நேர்த்தியாக செயல்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதேபோல 5 சவரனுக்கு குறைவாக அடகு வைத்திருக்கும் அனைத்து ஏழை எளிய மக்களின் நகைக்கடனும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டதில் பல விதி மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நகைக்கடன் தள்ளுபடி விஷயத்தில் பல நிபந்தனைகளை விதித்தனர்.

தமிழகத்தில் நாளை (மார்ச் 1) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்!

ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் நகைக்கடன் வாங்கியிருப்பவர்கள், இதற்கு முன்னாடியே பயிர்க்கடன் வாங்கியிருப்பவர்கள், வெவ்வேறு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஒரே வீட்டில் இருவர் ஆகியோருக்கு வங்கிக்கடன் தள்ளுபடி கிடையாது என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 48 லட்ச மக்களுக்கு நடைக்கடன் தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்த்த சமயத்தில் 13 லட்ச ஏழை எளிய மக்கள் மட்டுமே அனைத்து நிபந்தனைகளுக்கும் உட்பட்டுள்ளனர்.

TN TRB 9494 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – வருடாந்திர தேர்வு அட்டவணை!

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களும் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது மாவட்டம் வாரியாக நகைக்கடன் பெற தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்து, அந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி செய்ய தேர்வானவர்கள் இன்று முதல் நகைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!