தமிழகத்தில் நாளை (மார்ச் 1) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்!

0
தமிழகத்தில் நாளை (மார்ச் 1) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்!
தமிழகத்தில் நாளை (மார்ச் 1) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்!
தமிழகத்தில் நாளை (மார்ச் 1) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மகா சிவராத்திரி சிவாலய ஓட்டம்!

தமிழகத்தில் வருடம்தோறும் வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டு வரும் மகா சிவராத்திரி விழா, நடப்பு ஆண்டு நாளை (மார்ச் 1) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் நாளை(மார்ச் 1) மகா சிவராத்திரி மிக சிறப்பாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த மகா சிவராத்திரி ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெறும். இந்த திருவிழாதான் குமரி மாவட்டத்தில் கோவில் விழாக்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நாளை 24 மணி நேரத்தில், சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவுக்கு உட்பட்ட 12 சிவாலய பெருமான்களை ஓட்டமாக ஓடிச் சென்றே தரிசிப்பது தான் இந்த சிவாலய ஓட்டத்தின் தனிச் சிறப்பு ஆகும்.

IPL 2022: மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உத்தேச 11 அணியில் 7 இந்திய வீரர்கள்!

திருமலை சூலப்பாணிதேவர், திக்குறிச்சி மஹாதேவர், திற்பரப்பு வீரபத்ரேஷ்வரர், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் பொன்மனை தீம்பிலான்குடிஷ்வரர், பந்நிப்பாகம் கிராதமூர்த்திஷ்வரர், கல்குளம் நீலகண்டர் மேலாங்கோடு காலகாலர், திருவிடைக்கோடு சடையப்பர், திருவிதாங்கோடு பரசுபாணிஷ்வரர், திருப்பன்றிக்கோடு பக்தவசலேஷ்வரர், திருநட்டாலம் சங்கரநாராயணர் ஆகிய 12 சிவாலய தரிசனத்திற்கு பிறகு திருவாட்டர் தேவசத்திற்கு சென்று, மூலவர் ஆதிகேசவ பெருமாளையும் தங்கத்திலான சிவலிங்கப் பெருமானையும் தரிசித்து அருள் பெற்று ஆன்மீக தரிசன பயணத்தை முடித்துக் கொள்வார்கள்.

TN TRB 9494 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – வருடாந்திர தேர்வு அட்டவணை!

இந்த தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மார்ச் 1 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை வருடம் தோறும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மகா சிவராத்திரி தினம் காரணமாக நாளை விடப்படும் விடுமுறையை ஈடு செய்ய 12ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக இருக்கும் என்று குமரி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!