தமிழகத்தில் விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி – கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி - கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அறிவிப்பு!
தமிழகத்தில் விவசாயிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி – கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அறிவிப்பு!

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகையும், தள்ளுபடி சான்றும் வழங்கப்பட்டு வருவதாக, கூட்டுறவுத்துறையின் மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன் தெரிவித்து உள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் சென்ற வருடம் முதல் முறையாக ஆட்சி பொறுப்பை பெற்ற திராவிட முன்னேற்ற கழகம் தங்களது தேர்தல் அறிக்கைகள் பலவற்றை கூறியிருந்தனர். அந்த வகையில் அவர்களின் தேர்தல் அறிக்கையில் ஒன்றாக இருந்த விவசாயிகளின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய இருப்பதாக கூறி இருந்தார் முதல்வர். ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் 5 பவுனுக்கு மிகாமல் அடகு வைத்து விவசாயிகள் பெற்ற நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய இருப்பதாக அறிவித்தார்.

12ம் வகுப்பு முடித்தவரா ? – உங்களுக்காக காத்திருக்கும் 2659 காலிப்பணியிடங்கள் !

ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம் அமலுக்கு வந்தது. மேலும் இந்த திட்டம் தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் நகைக்கடன் தள்ளுபடி வழங்குவதில் பல நிபந்தனைகள் இருந்து வருகிறது. அதில் ஏற்கனவே பயிர் கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் நகைக்கடன் தள்ளுபடி பெற முடியாது என்ற ஒரு அதிர்ச்சி தகவலும் உள்ளது. மேலும் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் 5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய நகைக்கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறி இருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு புதிய நிபந்தனை ஒன்றை வைத்து விட்டனர். அதாவது, சுமார் 35 லட்சத்து 30 ஆயிரம் நபர்கள் நகைக்கடன் தள்ளுபடிக்கான தகுதியைப் பெறவில்லை என்றும் 13 லட்சத்து 37 ஆயிரம் நபர்கள் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுள்ளவர்கள் என்றும் அவர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்து விட்டனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி – அகவிலைப்படி கணக்கீட்டில் மாற்றம்!

இந்நிலையில் தற்போது கோவை மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பொள்ளாச்சி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை ஆகிய நிறுவனங்களில் நகைக்கடன் தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, மொத்த எடை 5 பவுனுக்கு உட்பட்டு, கடன் பெற்று அரசாணைப்படி தகுதிகளை நிறைவு செய்துள்ளவர்கள் 47,567 பேர் உள்ளனர். மேலும் இவர்களுக்கு 199.52 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு இந்த பயனாளிகளுக்கு, நகைக்கடன் தள்ளுபடி சான்றும், நகையும் வழங்கப்பட்டு வருவதாக கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் பார்த்திபன் அறிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!