‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ – தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்பு!!

0
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' - தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்பு!!
'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' - தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்பு!! 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' - தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்பு!!
‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ – தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்பு!!

திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், அவருடன் 33 அமைச்சர்களும் ஆளுநர் மாளிகையில் தமிழக கவர்னர் முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

பதவி பிரமாணம்:

தமிழக சட்டமன்ற வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடந்தது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் கடந்த 2ம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 159 இடங்களில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மே 10 முதல் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

ஸ்டாலின் தனது அமைச்சரவையில் பொறுப்பேற்க உள்ளவர்களின் பட்டியலை தமிழக கவர்னரிடம் ஒப்படைத்தார். இதனை ஏற்ற தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அவர்கள் ஸ்டாலின் அவர்களை தமிழக முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுத்தார். அதன்படி, இன்று மே 7ம் தேதி காலை 9 மணி முதல் பதவி ஏற்பு விழா நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காலம் என்பதால் பதவி ஏற்பு எளிமையாக ஆளுநர் மாளிகையில் நடக்கிறது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி, இன்று காலை தொடங்கப்பட்ட பதவி ஏற்பு விழாவில் ஆளுநர் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்போது, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் ஒவ்வொருவராக பதவி பிரமாணம் ஏற்று வருகின்றனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர் உயர்வு – வாகன ஓட்டிகள் கவலை!!

முக ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவிற்கு பிறகு திமுக தலைவர்கள் கருணாநிதி, அண்ணா, பெரியார் அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த இருக்கிறார். பின்னர் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட உள்ளார். பின்னர் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று தயார் தயாளு அம்மாளிடம் ஆசி வாங்க உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!