
அடிச்சது பம்பர் லாட்டரி., தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட போனஸ் – தீபாவளிக்கு ஜாலி தான்!
தீபாவளி பண்டிகையானது வருகிற 24ம் தேதி அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாட அரசு ஊழியர்கள் போனஸ் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி தற்போது அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தீபாவளி போனஸ்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு கூடுதலான செலவினம் ஏற்பட்டது. இதனால் அரசுக்கு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனை சரி செய்ய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 75வது சுதந்திர தின விழாவின் போது தமிழக முதல்வர் அகவிலைபப்டி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படி இருந்து தற்போது 34% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். இது போன்று பல்வேறு சலுகைகளும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையானது வருகிற 24ம் தேதி அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் எனவும் தங்களுக்கு போனஸ் தொகையானது வழங்கப்பட வேண்டும் எனவும் அரசு ஊழியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
ரயிலில் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்தால் இனி இதான் தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
இதையடுத்து தற்போது தீபாவளி பண்டிகையானது நெருங்கிவிட்ட நிலையில் போனஸ் குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிற C மற்றும் D பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10% போனஸ் தொகையானது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8.33% போனஸ் தொகையும் மற்றும் 1.67% கருணை தொகையும் என மொத்தமாக 10% போனஸ் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்