
தமிழகத்தில் 12-ம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட் தேதி வெளியீடு – அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு ஹால் டிக்கெட் வெளியாகும் தேதியை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கு காண்போம்.
துணைத்தேர்வு ஹால் டிக்கெட் :
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் 19-26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. துணைத்தேர்வெழுத விண்ணப்பித்தத் தனித்தேர்வர்கள் 14.06.2023 அன்று முதல் தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுக அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என அரசு தெரிவித்துள்ளது.
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:
- www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்
- அந்த பகுதியில் “HALL TICKET” என்ற வாசகத்தினை கிளிக் செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள “HSE SECOND YEAR SUPPLEMENTARY EXAM, JUNE/JULY 2023 – HALL TICKET DOWNLOAD” என்பதை கிளிக் செய்யவும்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. முன்னேற்பாடு பணிகள் தீவிரம் – பள்ளிக்கல்வித்துறை அறிக்கை!
- அதில் தேர்வர்கள் தங்களது விண்ணப்ப எண் அல்லது நிரந்தரப் பதிவெண்
மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்யவும். - தேர்வு ஹால் டிக்கெட் திரையில் தோன்றும்.
- அதை பதிவிறக்கம் செய்து, சேமிக்கவும்.