ரூ.300 கோடி நிதியில் திருசெந்தூர் முருகன் கோயில் மேம்பாட்டு பணிகள் – அறநிலையத்துறை & HCL கூட்டுப்பணி!

0
ரூ.300 கோடி நிதியில் திருசெந்தூர் முருகன் கோயில் மேம்பாட்டு பணிகள் - அறநிலையத்துறை & HCL கூட்டுப்பணி!
ரூ.300 கோடி நிதியில் திருசெந்தூர் முருகன் கோயில் மேம்பாட்டு பணிகள் - அறநிலையத்துறை & HCL கூட்டுப்பணி!
ரூ.300 கோடி நிதியில் திருசெந்தூர் முருகன் கோயில் மேம்பாட்டு பணிகள் – அறநிலையத்துறை & HCL கூட்டுப்பணி!

திருச்செந்தூர் கோயிலில் தற்போது ரூ.300 கோடி நிதியில் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக கோயில் அறங்காவலர் குழு தலைவர் அறிவித்துள்ளார்.

திருச்செந்தூர் கோயில்:

தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமை வாய்ந்த மற்றும் பழைமையான கோயில்களையும் அறநிலையத்துறை மேம்படுத்தும் பணிகளை செய்து வருகிறது. இதற்காக ஆய்வு பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டு, அதன்பின்னர் இப்பணிகளுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது திருச்செந்தூர் கோயிலை ரூ.300 கோடியில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதன்படி, ரூ.200 கோடி செலவில் பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக் கூடம், கோயில் வளாகத்தில் சாலை வசதி, காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வறை அமைத்தல், கோயில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, முடி காணிக்கை செலுத்தும் இடம் போன்றவற்றை இந்து சமய அறநிலையத்துறை, பிரபல மென்பொருள் நிறுவனமான HCL-உடன் இணைந்து செயல்படுத்த உள்ளது.

ஆதிதிராவிட & பழங்குடி மக்களுக்கான இறுதி ஈமச்சடங்கு உதவி தொகை உயர்வு – அரசின் அதிரடி உத்தரவு!

Exams Daily Mobile App Download

மேலும், ரூ. 100 கோடி செலவில் ஒரே நேரத்தில் 1000 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் அன்னதானக் கூடம், பணியாளர் குடியிருப்பு, கோயிலின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தல், பக்தர்கள் தங்கும் விடுதி, சலவைக் கூடம், சுகாதார வளாகம், பேருந்து நிலையம் போன்றவை அமைக்கப்படும் என்றும், இப்பணிகள் 2 ஆண்டுகளில் முடியும் வகையில் செயல்பாடுகள் இருக்கும் என்று திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் அறிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!