TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நேரம் மாற்றம், வயது வரம்பு தளர்வுகள்!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - நேரம் மாற்றம், வயது வரம்பு தளர்வுகள்!
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - நேரம் மாற்றம், வயது வரம்பு தளர்வுகள்!
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நேரம் மாற்றம், வயது வரம்பு தளர்வுகள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் 5000 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த தேர்வுகளுக்கான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

TNPSC அறிவிப்பு:

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. மக்கள் இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு போட்டித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

TCS, Cognizant, Wipro IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – முடிவுக்கு வரும் WFH! முழு விபரம் இதோ!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு தொகுதி இரண்டுக்கான தேர்வை அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக தேர்வுகள் நடைபெறாததால் 5000க்கு அதிகமான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும் எனவும் மே 21ம் தேதி குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBSE 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு!

இதில் நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களுக்கும் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும். இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 100 கேள்விகள் மொழிப்பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இந்நிலையில் இந்த தேர்வுகளில் நேர மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற தேர்வுகள், இனி காலை 9.30 மணிக்கு தொடங்கும். அதன்படி காலை வேளையில் 9.30 முதல் 12.30 வரை தேர்வு நடைபெறும். பிற்பகலில் நடைபெறும் தேர்வுகள் வழக்கம்போல் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!