மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – அரசின் முடிவு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை - அரசின் முடிவு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை - அரசின் முடிவு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – அரசின் முடிவு!

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை வழங்குவது குறித்து அரசுக்கும், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

அகவிலைப்படி:

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வருடந்தோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் குறைந்த பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டு மொத்தம் 28% ஆக அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நேரம் மாற்றம், வயது வரம்பு தளர்வுகள்!

இந்த நேரத்தில் அரசு 18 மாத காலமாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2022 ஜனவரி மாதம் முதல் இந்த நிலுவைத் தொகை கிடைக்கும். இந்த தொகை ஒரே தவணையில் வழங்க முடிவு செய்திருப்பதாக பல தகவல்கள் வந்தது. ஒரே சென்ட்டில்மெண்டில் நிலுவையில் உள்ள அகவிலைப்படி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. தற்போது ஊழியர்கள் அகவிலைப்படி குறித்து அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர்.

ராஜபாளையத்தில் நாளை (மார்ச் 15) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இந்த நிலையில் 18 மாதங்களாக நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகையை வழங்குவது குறித்து அரசுக்கும், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து அரசு தரப்பிடம் ஊழியர்கள் பிரதிநிதிகள் கோரிக்கை வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில், அகவிலைப்படி நிலுவைத் தொகை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!