வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம் – அரசு சலுகை அறிவிப்பு!
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் 27.08.2021ம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள அரசு கால அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு புதுப்பிப்பு:
தமிழகத்தில் அரசு பணிகளில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பள்ளிகளிலேயே பதிவு செய்து விடுகின்றனர். அதன் பிறகு 12ம் வகுப்பு முடித்தவுடன் கல்வி தகுதிகளையும் பள்ளி நிர்வாகத்தில் பதிவு செய்கின்றனர். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிப்பது அவசியம்.
மீரா மிதுனின் யூடியூப் சேனல் முடக்கம் – சைபர் கிரைம் போலீசார் கடிதம்!
மூன்று ஆண்டுக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் கால அவகாசம் அளித்துள்ளது. அதன்படி 2017, 2018, 2019ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறி இருந்தால் வரும் 27.08.2021ம் தேதிக்குள் புதுப்பித்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வந்து புதுப்பித்துக் கொள்ளலாம். www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது பதிவஞ்சல் வாயிலாகவோ பதிவை புதுப்பித்து கொள்ளலாம். மேலும் 27.08.2021 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No