ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் – பயோமெட்ரிக் இயந்திரத்தில் கோளாறு!
தேனி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் கோளாறு காரணமாக ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் நவீன பயோமெட்ரிக் இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயோமெட்ரிக் முறை:
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை அறிமுகபடுத்தப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையின் படி, ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே, ரேஷன் கடைக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும். இதற்காக வழங்கப்பட்டுள்ள மின்னணு கருவியில் கைரேகையை பதிவு செய்வது அவசியமாகும். ஆனால் இந்த பயோமெட்ரிக் முறை சரியாக வேலை செய்வதில்லை என சமீப காலமாக புகார்கள் எழுந்து வருகிறது.
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க கால அவகாசம் – அரசு சலுகை அறிவிப்பு!
கைரேகை பதிவு செய்வதற்கு இணையதள வசதி தேவைப்படுவதால் மலை ஓரங்களில் உள்ள கிராம பகுதிகளில் இணையதள வசதி சீராக இல்லாததால் ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. பயோமெட்ரிக் இயந்திரம் வேலை செய்யாத நேரங்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பணிச்சுமையும் அதிகரிக்கிறது. தற்போது தேனி மாவட்ட ரேஷன் கடைகளில் உள்ள பயோமெட்ரிக் இயந்திரத்தில் விரல் ரேகை பதிவாவதில்லை. இதனால் ரேஷன் பொருட்கள் வழங்காமல் திருப்பி அனுப்புவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
TN Job “FB
Group” Join Now
மேலும் விரல் கைரேகை பதிவாகாத நபர்கள், ஆதார் அட்டையில் விரல் கை ரேகையை புதுப்பிக்க தாலுகா அலுவலக இ-சேவை மையத்திற்கு படையெடுக்கின்றனர். இதற்கு ஒரு வார காலம் ஆவதால் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று ரேஷன் அட்டைதாரர்கள் கவலையடைந்துள்ளனர். எனவே இணையதள குறைபாடுகளை தவிர்த்து நவீன பயோமெட்ரிக் இயந்திரத்தை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.