மீரா மிதுனின் யூடியூப் சேனல் முடக்கம் – சைபர் கிரைம் போலீசார் கடிதம்!
மீரா மிதுன் பட்டியலினத்தவரை இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது யூடியூப் சேனலை முடக்க கோரி ஒன்றிய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
மீரா மிதுன்:
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் தான் மீரா மிதுன். தன்னை ஒரு சூப்பர் மாடல் எனக்கூறி கொண்டதோடு மட்டுமல்லாமல் தனது திமிர் பேச்சு மற்றும் செயல்களினால் ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்து வந்தார். அதனை தொடர்ந்து எதிர்மறையான புகழ் பரவி வந்த நிலையில் சூர்யா, விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்து ட்ரெண்டானர். இது போன்ற செயல்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தார்.
தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகள் தொடர்ந்து தற்போது தனது ஆண் நண்பருடன் சேர்ந்து பட்டியலின சமூகத்தினரை இழிவுப்படுத்தி பேசியுள்ளார். அது பெரும் சர்ச்சையாக எழுந்த நிலையில் மீரா மிதுனின் ஆண் நண்பர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கேரளாவில் தலைமறைவானார் மீரா மிதுன். அதனை தொடர்ந்து அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மீரா மிதுன் பேசியது குறித்து பல்வேறு தரப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
TN Job “FB
Group” Join Now
அதனை தொடர்ந்து மீரா மிதுன் அதிரடியாக கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார். அதனை தொடர்ந்து மீரா மிதுன் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது நடிகை மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க கோரி ஒன்றிய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.