இந்தியா முழுவதும் திரையரங்கங்களில் டிக்கெட் விலை ரூ.75 மட்டுமே? அறிவிப்பு வெளியீடு!

0
இந்தியா முழுவதும் திரையரங்கங்களில் டிக்கெட் விலை ரூ.75 மட்டுமே? அறிவிப்பு வெளியீடு!
இந்தியா முழுவதும் திரையரங்கங்களில் டிக்கெட் விலை ரூ.75 மட்டுமே? அறிவிப்பு வெளியீடு!
இந்தியா முழுவதும் திரையரங்கங்களில் டிக்கெட் விலை ரூ.75 மட்டுமே? அறிவிப்பு வெளியீடு!

தேசிய சினிமா தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் உள்ள திரையரங்கங்களில் வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி டிக்கெட் கட்டணம் ரூ.75 மட்டுமே வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்ரக திரையரங்கங்களிலும் இந்த டிக்கெட் விலை தான் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிக்கெட் விலை

தற்போதெல்லாம் எந்த புது படம் வந்தாலும் குடும்பத்துடன் திரையரங்கங்களுக்கு சென்று திரைப்படம் பார்த்து மகிழ்வது வழக்கமாகிவிட்டது. மக்களின் ஆர்வத்தை புரிந்துகொண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது திரைப்படம் வெளியாகிவிடுகிறது. அதிலும், பண்டிகை தின நாட்களில் வரிசைகட்டி கொண்டு திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. இதனிடையே, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் தேதி தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தேசிய சினிமா தினத்தை கொண்டாடும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள திரையரங்களில் டிக்கெட் விலையை குறைக்கலாம் என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா முடிவெடுத்துள்ளது. அதாவது, இந்தியா முழுவதும் இருக்கின்ற 4,000 ஸ்க்ரீன்களுக்கு டிக்கெட் கட்டணம் ரூ.75 மட்டுமே வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர்ரக திரையரங்குகளான PVR, INOX, CINEPOLIS, CARNIVAL, MIRAJ, CITYPRIDE, ASIAN, MUKTA A2, MOVIE TIME, WAVE, M2K ஆகியவற்றிலும் ரூ.75 மட்டுமே வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ரேஷன் கடைகளில் PM மோடியின் உருவ படம்? அமைச்சர் அதிரடி உத்தரவு!

மேலும், கொரோனா காலகட்டத்தில் பலரும் ஒடிடி தளத்திலேயே திரைப்படத்தை பார்த்து பழகிவிட்டதால் பலரும் திரையரங்கத்திற்கு வருவதையே மறந்துவிட்டனர். இந்த பொது மக்களையும் திரையரங்கத்திற்கு கூட்டி வர வேண்டும் என்பதற்காக தேசிய சினிமா தினத்தை வித்தியாசமாக கொண்டாட முடிவெடுத்துள்ளனர். மேலும், மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா குழுமத்தின் அறிவிப்பின் படி எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் ரூ.75 மட்டுமே வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!