இந்தியாவில் ரேஷன் கடைகளில் PM மோடியின் உருவ படம்? அமைச்சர் அதிரடி உத்தரவு!

0
இந்தியாவில் ரேஷன் கடைகளில் PM மோடியின் உருவ படம்? அமைச்சர் அதிரடி உத்தரவு!
இந்தியாவில் ரேஷன் கடைகளில் PM மோடியின் உருவ படம்? அமைச்சர் அதிரடி உத்தரவு!
இந்தியாவில் ரேஷன் கடைகளில் PM மோடியின் உருவ படம்? அமைச்சர் அதிரடி உத்தரவு!

இந்தியாவில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரேஷன் கடைகள்:

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். மேலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படுவதற்கு பெரும் பங்கு மத்திய அரசினையே சாரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் உடன் கலந்து கொண்ட காமரெட்டி மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலிடம், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியில், மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எவ்வளவு பங்கு உள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஆட்சியர் வெளிச்சந்தையில் தோராயமாக ரூ.35க்கு விற்கப்படும் அரிசி, ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது என்றார். இதில் மத்திய அரசு 30 ரூபாயும், மாநில அரசு 4 ரூபாயும் வழங்குவதாகவும், ரேஷன் கடை பயனாளிகளிடம் ஒரு ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

சென்னை: ஆபரண தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – கவலையில் நகைப்பிரியர்கள்!

கடந்த 2020 ஆண்டு முதல் இந்த திட்டம் முற்றிலும் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படுகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து ஏழை மக்களுக்கு பிரதமரின் இலவச தானியங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 5 கிலோ உணவு தானியங்களுக்கான முழுச் செலவையும் மோடி அரசே ஏற்கிறது என்றும் தெரிவித்தார். இருப்பினும் ரேஷன் கடைகளில் மோடியின் படத்தை என் வைப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இதை அடுத்து, பாஜகவினர் பிரதமர் மோடியின் பேனரை ரேஷன் கடைகளில் வைத்தால், அது அகற்றப்படாமலோ அல்லது கிழிக்கப்படாமலோ இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!