சென்னை: ஆபரண தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – கவலையில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை: ஆபரண தங்கத்தின் விலை அதிரடி உயர்வு - கவலையில் நகைப்பிரியர்கள்!
சென்னை: ஆபரண தங்கத்தின் விலை அதிரடி உயர்வு - கவலையில் நகைப்பிரியர்கள்!
சென்னை: ஆபரண தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – கவலையில் நகைப்பிரியர்கள்!

தமிழகத்தில் இன்று காலை நேர நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 56 உயர்ந்துள்ளது. கடந்த ஓரிரு தினங்களாக சரிவை கண்டு வந்த தங்கம் விலை வாரத்தின் இறுதி நாளான இன்று உயர்ந்துள்ளது நகைப்பிரியர்கள் மத்தியிலும், திருமணத்திற்கு நகைகள் வாங்குவோர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலை:

இந்தியாவில் நாளுக்கு நாள் ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. இந்த தங்கத்தின் விலையானது அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்பட்ட உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் கச்சா எண்ணெய் விலை உயர்வு மேலும் பங்குச்சந்தை சரிவு, தங்கத்தின் மீதான அதிக முதலீடு ஆகியவற்றின் காரணமாக தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் அடைந்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் அதிக அளவில் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

அதனால் உலகம் முழுவதும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஏற்கனவே தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் மத்திய அரசு தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி மற்றும் இறக்குமதி வரி உயர்த்தி உள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் விலையானது மக்கள் எதிர்பார்த்த அளவு குறையவில்லை தொடர்ந்து ஏற்றம் அடைந்து தான் வருகிறது. கடந்த மாதம் 25ம் தேதி வழக்கத்திற்கு மாறாக தங்க விலையானது, திடீர் உச்சம் அடைந்து, சவரன் ரூ.200 உயர்ந்து ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.

குடும்ப ஓய்வூதியத்தில் நாமினி தாக்கல் செய்யாதவர்கள் கவனத்திற்கு – அரசின் முக்கிய அறிவுறுத்தல்கள்!

அதன் தொடர்ச்சியாக இன்றைய காலை நேர நிலவரப்படி தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 56 உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,776க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,722 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.58.20-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.58,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here