மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) 3% உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - அகவிலைப்படி (DA) 3% உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - அகவிலைப்படி (DA) 3% உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) 3% உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34% ஆக வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான தகவல் வந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அகவிலைப்படி:

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அதிகரிக்கும் விலைவாசியை பொறுத்து அகவிலைப்படி ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்தது. அதனால் சிரமத்திற்கு ஆளான ஊழியர்கள் மீண்டும் அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.

சென்னை பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு – செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

அதனை தொடர்ந்து 2022ம் ஆண்டு முதல் அகவிலைப்படி மேலும் 3% உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த அகவிலைப்படி 34% ஆக அதிகரிக்கும். இந்த அகவிலைப்படி உயர்வால் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவர். அகவிலைப்படி 34% ஆக உயர்த்தப்பட்டால் அடிப்படை சம்பளம் ரூ.18,000 பெறுபவர்களுக்கு ஊதியம் ரூபாய் 6,120 கூடுதலாக கிடைக்கும். மேலும் அடிப்படை சம்பளம் ரூ.56,900 பெறுபவருக்கு ரூ.19,346 கூடுதல் தொகையாக கிடைக்கும்.

தற்போது 2022ம் ஆண்டு தொடங்கி மூன்று மாதங்கள் ஆன நிலையில் இதுவரை அகவிலைப்படி 3% உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில் 7 வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி,மார்ச் இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நிதி ஆண்டுக்கு முன்பே அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!