Reliance Jio வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – அறிமுகமான சிறந்த டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Reliance Jio வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு - அறிமுகமான சிறந்த டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு - அறிமுகமான சிறந்த டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள்!
Reliance Jio வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – அறிமுகமான சிறந்த டேட்டா ரீசார்ஜ் திட்டங்கள்!

ஜியோ நிறுவனம் தற்போது ஒரு வருடத்திற்கான டேட்டா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. ரீசார்ஜ் செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்கள் எந்தெந்த பிளான்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டு பயன் பெறவும்.

ஜியோ திட்டங்கள்:

ஜியோ நிறுவனம் தான் நாட்டில் முன்னணி டெலிகாம் நெட்வொர்க் நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. தடையற்ற நெட்ஒர்க் சேவை, மலிவான விலையில் ரீசார்ஜ் ஆகிய பல வசதிகளை ஜியோ நிறுவனம் மக்களுக்கு வழங்கி வருகிறது. அதாவது குறைவான விலையில் அதிக டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஜியோ இரண்டு சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘வொர்க் ஃப்ரம் ஹோம் டேட்டா பேக்குகள்’ என்கிற பிரிவில் ஒரு வருடத்திற்கான இரண்டு டேட்டா சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அகவிலைப்படி (DA) 3% உயர்வு!

முதலாவதாக அறிமுகப்படுத்தப்பட்ட வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தின் விலை ரூ.2,878 ஆகும். இந்த டேட்டா 365 நாட்கள் செல்லுபடியாகும். வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அதிவேக நெர்ஓர்க் வழங்கப்படுகிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் மொத்தமாக 730 ஜிபி அதிவேக நெர்ஓர்க் சேவை வழங்கப்படுகிறது. 2 ஜிபி டேட்டா முடிவடைந்துவிட்டால் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்திற்கு SMS அல்லது OTT சேவைகள் எதுவும் கிடையாது.

இரண்டாவதாக அறிமுகப்படுத்தப்பட்ட வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தின் விலை ரூ.2,998 ஆகும். இந்த டேட்டாவும் 365 நாட்கள் செல்லுபடியாகும். வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு 2.5 ஜிபி அதிவேக நெர்ஓர்க் வழங்கப்படுகிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் மொத்தமாக 912.5 ஜிபி அதிவேக நெர்ஓர்க் சேவை வழங்கப்படுகிறது. 2 ஜிபி டேட்டா முடிவடைந்துவிட்டால் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும். மேலும், ஜியோ வொர்க் ஃப்ரம் ஹோம் பிரிவில் சிறப்பான மூன்று திட்டங்கள் உள்ளது. அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.181, ரூ.241 மற்றும் 301 ரூபாய்க்கு சிறப்பான டேட்டா பேக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.181 திட்டத்திற்கு 30ஜிபி டேட்டாவும், ரூ.241 திட்டத்திற்கு 40ஜிபி டேட்டாவும், ரூ.301 திட்டத்திற்கு 50 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!