மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 3% அகவிலைப்படி (DA) அதிகரிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - 3% அகவிலைப்படி (DA) அதிகரிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - 3% அகவிலைப்படி (DA) அதிகரிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – 3% அகவிலைப்படி (DA) அதிகரிப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சுமார் 3% அகவிலைப்படியை (DA) உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் 17% லிருந்து 22% ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை பெற உள்ளனர்.

அகவிலைப்படி உயர்வு

இந்த ஆண்டு மார்ச் மாதம், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA & DR) தொகையை 3 சதவீதமாக உயர்த்தி அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு DA தொகையை உயர்த்தி அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சர்வதேச தொழிலாளர் தினமான மே 1 அன்று, தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை (DA) உயர்த்துவதாக சத்தீஸ்கர் அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, தற்போதுள்ள 17% லிருந்து 22% ஆக DA தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

இத்தொகை மே 1, 2022 முதல் அமலுக்கு வர உள்ளது. இது குறித்த மாநில அரசின் முடிவை ட்விட்டரில் வெளியிட்ட முதல்வர் பூபேஷ் பாகேல், ‘அரசு ஊழியர்களின் நலன் கருதி ஒரு பெரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊழியர்களின் அகவிலைப்படியை 5% உயர்த்தி அறிவிக்கிறேன். இந்த புதிய கட்டணம் மே 1 முதல் அமலுக்கு வரும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான டிஏவை வழங்க வேண்டும் என மாநில அதிகாரிகள் முதல்வர் பாகேலிடம் கோரிக்கையை வைத்தனர்.

Exams Daily Mobile App Download

தவிர மாநில அரசு ஊழியர்கள் கடந்த மாதம் குறைந்த அகவிலைப்படிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தி இருந்தனர். இதனை தொடர்ந்து அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. இப்போது இந்த ஆண்டு மார்ச் மாதம், விலைவாசி உயர்விலிருந்து நிவாரணம் வழங்குவதற்காக அவர்களின் அகவிலைப்படி (DA) தொகையை தலா 3 சதவீத உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி இப்போது மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களின் அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்தில் 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!