
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – அதிகரிக்கும் விமான கட்டணம்! ஷாக் அப்டேட்!
தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏப்ரல், மே மாதங்களில் வகுப்புகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்படும். விடுமுறையை ஒட்டி, பலர் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். அதனால் விமான டிக்கெட்கள் வேகமாக புக் செய்யப்பட்டு வருவதால் கட்டணம் தற்போது உயர்ந்து இருக்கிறது.
கட்டணம் உயர்வு
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் வைக்கப்பட்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விடுமுறை விடப்படும். அந்த வகையில் பலர் ஒரு மாத விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடுகின்றனர். அதற்காக முன்னதாகவே விமான டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதனால் மே மாதத்தில் வெளிநாடுகளுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
தமிழகத்தில் ‘இந்த’ மாவட்டத்தில் வருகிற ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சென்னையில் இருந்து மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங், ஸ்ரீலங்கா செல்ல அதிகமான பயணிகள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நாடுகளுக்கான டிக்கெட்கள் சுமார் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரமும், ஈராக், பக்ரைன், ஈரான், சவூதி அரேபியா போன்ற நாடுகளுக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை டிக்கெட் விலை அதிகரித்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால் சென்னையில் இருந்து இந்த நாடுகளுக்கு நேரடி விமானங்கள் இல்லை என்பதால், மற்ற மாநிலங்கள் வழியாக செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் விமான கட்டணம் அதிகமாக செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் வெளிநாடுகள் மட்டுமில்லாமல் உள்நாட்டிற்கு செல்லவும் விமான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். அதன் படி சென்னையில் இருந்து ஸ்ரீ நகர் வழியாக டெல்லி செல்ல ஒரு வழி கட்டணம் ரூ.13 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே போல அந்தமான் செல்ல ரூ. 8000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download