சன் டிவி ‘சித்தி 2’ நடிகை பிரீத்தி ஷர்மாவுக்கு திடீர் திருமணம்? அவரே வெளியிட்ட புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!

0
சன் டிவி 'சித்தி 2' நடிகை பிரீத்தி ஷர்மாவுக்கு திடீர் திருமணம்? அவரே வெளியிட்ட புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!
சன் டிவி 'சித்தி 2' நடிகை பிரீத்தி ஷர்மாவுக்கு திடீர் திருமணம்? அவரே வெளியிட்ட புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!
சன் டிவி ‘சித்தி 2’ நடிகை பிரீத்தி ஷர்மாவுக்கு திடீர் திருமணம்? அவரே வெளியிட்ட புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!

சன் டிவி ‘சித்தி 2’ சீரியலில் நடித்து வரும் நடிகை பிரீத்தி ஷர்மா திருமண கோலத்தில் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட அவருக்கு திருமணம் ஆகி விட்டதா என வலைதள பக்கத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பிரீத்தி ஷர்மா

சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் ஹிட் சீரியலான ‘சித்தி 2’ மூலம் மக்களுக்கு பரீட்சயமானவர் நடிகை பிரீத்தி ஷர்மா. பல ஆண்டுகளுக்கு முன்பாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘சித்தி’ தொடரின் 2ம் பாகத்தில் நடிகை ராதிகாவின் மகளாக வெண்பா என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை பிரீத்தி ஷர்மாவுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்து வந்தனர். அதுவும் இந்த சீரியலில் கவின் மற்றும் வெண்பா ஜோடிக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

B.Ed பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – நவ.29 முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம்!

ஆரம்பத்தில் ‘சித்தி 2’ சீரியல் நடிகை ராதிகாவை மையமாக வைத்து நகர்ந்து வந்த நிலையில், அவரது திடீர் விலகலுக்கு பின்பாக இத்தொடர் முற்றிலும் கவின், வெண்பாவை வைத்து நகர்ந்து வருகிறது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை பிரீத்தி ஷர்மா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

ஜெனி வீட்டிற்கு செல்ல வேண்டும் என பிடிவாதமாக இருக்கும் பாக்கியா, கோபியை தடுக்கும் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அந்த வகையில் தற்போது கன்னட மொழியில் தயாராகி வரும் ‘காவ்யாஞ்சலி’ சீரியல் ஷூட்டிங்கின் போது எடுத்துக்கொண்ட, திருமண கோலத்தில் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்போது நடிகை பிரீத்தி ஷர்மாவை திருமண கோலத்தில் கண்ட ரசிகர்கள் இவருக்கு திருமணம் ஆகி விட்டதா என வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் இந்த கன்னட சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்து வருபவர் ‘சித்தி 2’ சீரியல் நடிகர் நந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!