விஜே சித்ராவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட கொடூரம்? தோழி அளித்த பரபரப்பு தகவல்!

0
விஜே சித்ராவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட கொடூரம்? தோழி அளித்த பரபரப்பு தகவல்!
விஜே சித்ராவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட கொடூரம்? தோழி அளித்த பரபரப்பு தகவல்!
விஜே சித்ராவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட கொடூரம்? தோழி அளித்த பரபரப்பு தகவல்!

பிரபல சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த ஆண்டு தற்கொலை செய்து மரணமடைந்த நிலையில், இப்போது சித்ராவின் மரணம் திட்டமிடப்பட்ட கொலை என்று அவரது தோழியும், நடிகையுமான ரேகா நாயர் தகவல் அளித்துள்ளார்.

விஜே சித்ரா மரணம்

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் இருக்கிறது. முன்னதாக, நடிகை சித்ராவின் மரணத்திற்கு தான் மட்டும் காரணம் இல்லை என்றும் அதற்கு பின்னால் சில அரசியல் பிரமுகர்களும் இருப்பதாக கணவர் ஹேம்நாத் குற்றம் சாட்டி இருந்தார். ஆனால், ஹேம்நாத் இந்த வழக்கில் இருந்து எஸ்கேப் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார் என சித்ராவின் தாயார் கூறி இருக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இதற்கிடையில், நடிகை சித்ராவை காருக்குள் வைத்து கொன்று விட்டு அதை தற்கொலையாக மாற்றியதாக சொல்லி அவரது தோழி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, ‘சித்ரா மரணமடைந்த இரவு, படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பி வரும் போது அவரை காரில் வைத்து கொலை செய்திருக்கிறார் ஹேம்நாத். பிறகு, இறந்த சடலத்தை எடுத்து ஹோட்டல் ரூமிற்கு கொண்டு வந்து தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியுள்ளார். இதை ஹேம்நாத் மட்டுமே செய்திருக்க முடியாது. அவருடன் 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொலையை செய்திருக்கலாம்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சித்ரா இறந்ததற்கு பின்பே நானும் இறந்திருப்பேன். ஆனால், நான் இந்த உண்மையை சொல்வதற்காக தான் நான் உயிரோடு இருக்கிறேன் என்று ஹேம்நாத் கூறுகிறார். இப்போது சித்ரா இறந்து ஒன்றரை வருடங்கள் கழித்து இன்னும் அந்த உண்மையை அவரால் சொல்ல முடியாதா. இதில் எதோ மர்மம் இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் சித்ராவின் மரணத்தில் நடந்தது என்ன என்பது குறித்து முழுமையான விஷயம் எதுவும் தெரியாத சூழ்நிலையில், சமீப காலமாக இது குறித்த சில மர்மமான விஷயங்கள் வெளியாகி பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here