தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

நாடு முழுவதும் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய, மாநில அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வலுக்கும் கோரிக்கை:

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் (2003ம் ஆண்டு) புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே இதை எதிர்த்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராடி வருகின்றனர். ஊழியர்களின் ஊதியத்தின் ஒரு பகுதியைப் பிடித்தம் செய்து, பங்குச்சந்தையில் முதலீடு செய்து, பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் பயன்களுக்குப் பங்கம் விளைவிப்பதாகவே இத்திட்டம் அமைந்துள்ளது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில், பணிக்கொடை, ஓய்வூதியம், மருத்துவக்காப்பீடு முதலிய எந்தப் பலன்களும் பணி ஓய்வுக்குப் பிறகு கிடைக்காது. அதனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் 19 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு பொறுப்பை தட்டிக்கழிக்க கூடாது, விரைவில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதிக செலவு ஆகும் என்பதால், அதை செயல்படுத்துவது சாத்தியமல்ல என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது அரசு ஊழியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

மே 16 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

பழைய ஓய்வூதியத் திட்டம், ராஜஸ்தான்,சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைமுறைக்கு வந்து விட்டது. தமிழ்நாடு அரசு, நினைத்தால் மத்திய அரசிடம் பேசி இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாமல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று அமைச்சர் கூறுவது சரியானது அல்ல. பழைய ஓய்வூதியத் திட்டத்தை பல மாநில அரசுகள் நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் அதற்கு நேர் எதிரான திசையில் பயணிப்பது தவறானது ஆகும். எனவே விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமலுக்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!