தமிழக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறையின் முக்கிய உத்தரவு!

0
தமிழக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - கல்வித்துறையின் முக்கிய உத்தரவு!
தமிழக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - கல்வித்துறையின் முக்கிய உத்தரவு!
தமிழக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறையின் முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10 வரை வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. இது குறித்து முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

முக்கிய உத்தரவு:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது கடந்த மாதம் 13 ம் தேதியிலிருந்து விடப்பட்டது. இதனை அடுத்து சுமார் 30 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. பழுதடைந்த கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் முதல் கட்டமாக 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டு வகுப்புகள், இன்று தொடங்கி உள்ளது. இதை தொடர்ந்து வருகிற 20-ந் தேதி 12ம் வகுப்புகளும் 27-ம் தேதி 11ம் வகுப்புகளும் தொடங்குகின்றன.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், இன்று பள்ளிகள் திறந்த உடன், தொடக்கப்பள்ளிகளில் 5ம் வகுப்பு, நடுநிலைப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு, உயர்நிலைப் பள்ளிகளில் 10ம் வகுப்பு, மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவ மாணவிகளுக்கு தாமதமின்றி டிசி (மாற்று சான்றிதழ்) வழங்கிட வேண்டும். இதர வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களின் பெற்றோர்கள் தாமாக முன்வந்து மாற்றுச் சான்றிதழ் கோரினால், அவற்றைத் தடையின்றி வழங்கிட வேண்டும். மாற்று சான்றிதழ் வழங்கும் பணிகளை இன்றும், நாளையும் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SBI வங்கியில் வேலைவாய்ப்பு – ரூ.78,230 வரை சம்பளம்! முழு விவரம் இதோ!

அரசுப்பள்ளிகளில் இன்றைய தினமே மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. அதனால் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை சேர முன்வரும் மாணவர்களிடம் டிசி இல்லாவிட்டாலும் அவர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த மாணவர்கள் முன்னதாக படித்த பபள்ளியிடம் இருந்து டிசி பெற்று அதைச் சமர்ப்பித்த பின் முறையாகப் பதிவேட்டில் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றும் அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தவிர, RTE சட்டத்தின் கீழ் இடங்கள் ஒதுக்கப்பட்டு அவற்றின் கீழ் சேர முன்வரும் குழந்தைகளையும் தடையின்றி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!