தமிழகத்தில் ஜன.1 முதல் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

0
தமிழகத்தில் ஜன.1 முதல் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் ஜன.1 முதல் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் ஜன.1 முதல் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா 2ம் அலைப்பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் (டிச.31) முடிவுக்கு வர இருக்கும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.

முழு ஊரடங்கு

நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று பரவல் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் மஹாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு, 144 தடை உத்தரவு உள்ளிட்ட சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சமூக பரவலாக மாறியுள்ள ஒமிக்ரான் தொற்றை கவனத்தில் கொண்டு டெல்லி முழுவதும் அரசு மினி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் ஒமிக்ரான் பரவலை தடுக்கும் விதமாக ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் இன்று (டிச.31) ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – வீடு தேடி வரும் டோக்கன்!

ஏற்கனவே தமிழகத்தில் தற்போது அமலில் இருந்து வரும் ஊரடங்கில், கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் மத வழிபாட்டு தலங்களில் நள்ளிரவு வழிபாடுகளை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றுடன் (டிச.31) முடிவுக்கு வரும் நிலையில் ஜனவரி 1 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இன்று (டிச.31) ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.15 வரை பள்ளிகள் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் ஏற்கனவே 45க்கும் மேற்பட்ட ஒமிக்ரான் வழக்குகள் பதிவாகி இருக்கும் நிலையில், இந்த பாதிப்புகள் தொடருவதை கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்பாக மாநிலம் முழுவதும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்றும் இது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!