
கோதைக்கு உதவி செய்யும் பாக்கியா, விருந்து நடக்கும் அதிர்ச்சியில் லேகா – வெளியான மெகா சங்கமம் ப்ரோமோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல்களின் இன்றைய மெகா சங்கம சிறப்பு எபிசோடில், சமையல்காரர்கள் இல்லாமல் தவிக்கும் கோதைக்கு பாக்கியா உதவி செய்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
சிறப்பு எபிசோடு
மக்களின் மனம் கவர்ந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற 2 முக்கியமான சீரியல்கள் தற்போது மெகா சங்கமத்தில் இணைந்திருக்கிறது. எதிலும் புதுமையை புகுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வரும் விஜய் டிவி, இந்த சிறப்பு மெகா சங்கமத்தில் சில சிறப்பு காட்சிகளை வைத்து மீண்டுமாக ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல்களின் இன்றைய எபிசோடில் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை சுசித்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார்.
‘பாரதி கண்ணம்மா’ பரினா & அஞ்சலிக்கு பிறந்த ஆண் குழந்தை – கலாய்க்கும் நெட்டிசன்கள்! வைரலாகும் மீம்ஸ்!
அதாவது, கோதையின் வீட்டில் தமிழுக்காக ஒரு ஹோமம் நடக்கிறது. இந்த ஹோமத்திற்கு பிறகு தனது பேக்டரி ஆட்களை எல்லாம் வீட்டுக்கு அழைத்து விருந்து வைக்க திட்டமிடும் கோதைக்கு அடுத்தடுத்து சில பிரச்சனைகள் எழுந்துள்ளது. அந்த வகையில் விருந்தில் சமைப்பதற்காக சமையல்காரரிடம் கோதை ஆர்டர் கொடுக்க அந்த சமையல்காரரை கோதையின் வீட்டுக்கு செல்ல விடாமல் தடுக்கிறார் லேகா. ஆனால் கோதைக்கு உதவி செய்ய முன்வரும் தனம், பாக்கியாவை அழைத்து சமையல் ஆர்டரை செய்து முடிக்கிறார்.
கண்ணம்மாவை வீட்டுக்கு அழைக்கும் சௌந்தர்யா, பாரதியின் முடிவு என்ன? வெளியான ப்ரோமோ!
இதற்கு மூர்த்தி, தனம், கதிர், முல்லை, மீனா, ஜீவா, சரஸ்வதி என அனைவரும் உதவி செய்கின்றனர். இப்போது கோதையை அவமானப்படுத்த எண்ணிக் கொண்டு வரும் லேகாவுக்கு விருந்து நடப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் லேகாவின் கையால் பேக்டரி ஊழியர்களுக்கு உணவை பரிமாற வேண்டும் என கோதை சொல்ல அவரின் முகமே மாறிவிடுகிறது. இதற்கிடையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘தமிழும் சரஸ்வதியும்’ மெகா சங்கமத்தில் பாக்கியாவின் வருகை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.