TCS நடத்தும் வினாடி வினா போட்டிகள் – இணையதள விண்ணப்ப பதிவு துவக்கம்!
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் சமீபத்தில் அறிவித்த படி பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டிகளை ஆன்லைன் வழியாக நடத்த உள்ளது. அதற்கான விண்ணப்ப பதிவுகளை செலுத்துவதற்கான இணையதளம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
போட்டி விண்ணப்பம்
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுட்பம் சார்ந்த வினாடி வினா போட்டியை தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையே நடத்தி வருகிறது. இந்த போட்டிகளில் நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் (8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை) கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு உருவான கொரோனா பேரலை நிமித்தமாக போட்டி நடைமுறைகள் அனைத்தும் ஆன்லைன் வழிக்கு மாற்றப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 26 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு – கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு!
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வினாடி வினா போட்டிகள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 23 ஆவது ஆண்டாக நடத்தப்பட்டு வரும் இப்போட்டிகள் இந்த ஆண்டும் வழக்கத்தை போல ஆர்வம் குறையாமல் இருக்கும் என TCS நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை பள்ளி மாணவர்களுக்கு இடையே காணப்படும் தொழில்நுட்பம் தொடர்பான திறனை சோதிக்கும் வகையில் இந்த ஆண்டும் நடத்தப்பட உள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதன் படி இந்த ஆண்டுக்கான IT வினாடி வினா போட்டிக்கான ஆன்லைன் பதிவுகள் செப்டம்பர் 30 வரை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகள் www.tcs.com/itwiz/register-here என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான நுழைவுக் கட்டணம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்த வினாடி வினா போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு போட்டியாளர்களுக்கு இரண்டு தனித்தனி ஆரம்ப சுற்றுகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.