பெருநகர சென்னை மாநகராட்சி செய்தி வெளியீடு – தனியார் மருத்துவமனைகள் கவனத்திற்கு!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. அதனை தொடர்ந்து சளி, காய்ச்சல் போன்ற அறிகுறியுடன் வரும் நோயாளிகள் குறித்த தகவல்களை மாநகராட்சிக்கு அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனை:
உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்று தமிழகத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்றின் அறிகுறிகளான சளி,காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்களின் விவரங்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரங்களையும் மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
TCS நடத்தும் வினாடி வினா போட்டிகள் – இணையதள விண்ணப்ப பதிவு துவக்கம்!
கடந்த 13ம் தேதி தனியார் மருத்துவமனைகள் உடனான ஆலோசனை கூட்டம் அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தனியார் மருத்துவமனைகளில் சளி காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெறும் நபர்கள் தனியார் மருத்துவமனைகளின் வாயிலாக வீடுகளில் தனிமைப் படுத்திக் கொள்ளும் நபர்கள் மற்றும் கோவிட் தொற்று பாதித்து தனியார் மருத்துவமனைகளில் இருந்து 12 நாட்களுக்கு முன்னதாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நபர்களின் விவரங்களை [email protected] எனும் மாநகராட்சியின் மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்துமாறு கூறப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
மேலும் மருத்துவமனை வளாகங்களில் அவ்வப்பொழுது கிருமி நாசினி மற்றும் மருந்து கொண்டு சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் அந்த விதிமுறைகளை பின்பற்றாத 231 தனியார் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் தனியார் மருத்துவமனைகள் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நபர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்களின் விவரங்களை மாநகராட்சிக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.