TCS நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TCS நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை தேடும் பொறியாளர்கள் மற்றும் எம்சிஏ & எம்எஸ்சி பட்டதாரி இளைஞர்களை பணியமர்த்த உள்ளதாகவும், இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS வேலைவாய்ப்பு:

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் இணையதளத்தில் வழங்கப்பட்ட விவரங்களின்படி, 2019, 2020 அல்லது 2021 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற B.E., B.Tech, M.E., M.Tech, MCA மற்றும் M.Sc பட்டம் பெற்றவர்களை பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை தேர்வுகளில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச மொத்த மதிப்பெண்கள் 70 சதவீதமாக இருக்க வேண்டும்.

அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இது தவிர, விண்ணப்பதாரர்கள் 6 முதல் 12 மாதங்கள் ஐடி பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டிசிஎஸ் ஆஃப் கேம்பஸ் டிஜிட்டல் பணியமர்த்தலுக்கான தேர்வு நடைமுறை எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் இரண்டு சுற்றுகளைக் கொண்டுள்ளது. எழுத்துத் தேர்வில் உள்ள திறனின் அடிப்படையில், நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் தகுதியின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். யுஜி பட்டதாரிகளுக்கு, சம்பளம் ஆண்டுக்கு 7 லட்சமாகவும், முதுகலை பட்டதாரிகளுக்கு, ஆண்டுக்கு 7.3 லட்சமாகவும் இருக்கும். பணியமர்த்தலுக்கு விண்ணப்பிக்க, தகுதியான விண்ணப்பதாரர்கள் TCS NextStep போர்ட்டலில் பதிவு செய்து பின்னர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, அவர்கள் டிஜிட்டல் டிரைவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Post Office இல் தினமும் ரூ.150 சேமித்தால் 20 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 25, 2022. தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு TCS ஹெல்ப்டெஸ்க் குழுவை அதன் மின்னஞ்சல்  ஐடியான [email protected] அல்லது  ஹெல்ப்லைன் எண் 18002093111 ல் தொடர்பு கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!