Post Office இல் தினமும் ரூ.150 சேமித்தால் 20 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!

0
Post Office இல் தினமும் ரூ.150 சேமித்தால் 20 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் - அருமையான சேமிப்பு திட்டம்!
Post Office இல் தினமும் ரூ.150 சேமித்தால் 20 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் - அருமையான சேமிப்பு திட்டம்!
Post Office இல் தினமும் ரூ.150 சேமித்தால் 20 லட்ச ரூபாய் ரிட்டன்ஸ் – அருமையான சேமிப்பு திட்டம்!

இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு பொது மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் வேறு பலன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு பொருளாதார பிரச்சனைகளை சாதாரண மக்களில் இருந்து பெரிய பணக்காரர்கள் வரை சந்தித்து வந்தனர். ஏனெனில் பல்வேறு தொழில்கள் தங்கள் வளர்ச்சியில் பாதிப்பு அடைந்தனர். அதனால் முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான முறைகளில் சேமிக்க முடிவு செய்தனர். இதில் குறிப்பாக அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிகளவு முதலீடு செய்ய தொடங்கினர். ஏனெனில் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி விகிதம் மிகவும் அதிகமானதாகவும், ஆபத்து குறைந்ததாகவும் உள்ளது.

தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய விதிமுறைகள் அமல்!

அஞ்சல் அலுவலகத்தில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் தற்போது பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனால் தங்கள் தேவைக்கேற்ப முதிர்வு காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து கொள்ளும் வசதிகளும் உள்ளது. இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் வரை வழங்கப்படுகிறது. மேலும் இதில் முதலீடு செய்வதால் ‘EEE’ வகையின் கீழ் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை கிடைக்கிறது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முழு நேரமும் பள்ளிகள் திறப்பு!

அதனால் இதில் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு சலுகையும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 25 வயதுடைய நபர் ரூ.4500ஐ ஒவ்வொரு மாதமும் முதலீடாக செலுத்தி வருகிறார். அதன்படி நாள் ஒன்றுக்கு 150 ரூபாயை சேமிக்க வேண்டும். இதையடுத்து ஒரு ஆண்டுக்கு ரூ.54,000யை செலுத்த வேண்டும். 20 வருடத்திற்கு ரூ.10.80 லட்சம் செலுத்த வேண்டும். மேலும் இதற்கு வட்டி கணக்கிடப்பட்டு முதிர்வு காலம் முடிவில் அதாவது 20 ஆண்டு கால முடிவில் ரூ.20 லட்சம் வரை சேமிக்க முடியும். அத்துடன் இந்த திட்டத்தில் திட்டத்தில் ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி பெற முடியும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!