TCS நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் – தகுதி உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு!

0
TCS நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் - தகுதி உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு!
TCS நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் - தகுதி உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு!
TCS நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் – தகுதி உள்ளிட்ட விவரங்கள் வெளியீடு!

இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் பெண் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. இதற்கான கல்வித்தகுதி, உள்ளிட்ட விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்புகள்:

கொரோனா பேரலைக்கு பின்னாக முடங்கி கிடைக்கும் பல்வேறு தொழில்களுக்கு மத்தியில் தொழில்நுட்ப நிறுவனங்களில் மட்டும் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக முன்னணி IT நிறுவனங்கள் கூட தற்போது படித்து முடித்துள்ள புதிய பட்டதாரிகளை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இந்தியாவின் முதன்மை IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இந்த நிதியாண்டில் சுமார் 40,000 புதிய ஊழியர்களை பணியமர்த்த ஆலோசித்துள்ளது.

தமிழகத்தில் வேலையில்லாதோருக்கு அரசு சார்பில் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இதற்கான பணிகளும் தற்போது துவங்கியிருக்கும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் TCS நிறுவனம் 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்நிறுவனம் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கான புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் திறமையான பெண் தொழில் வல்லுநர்களுக்கு வாய்ப்புகளை வழங்க இருக்கிறது.

இப்போது புதிய பணியமர்த்தலுக்கான தகுதிகள், அனுபவம் குறித்த தகவல்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி, புதிய வேலை வாய்ப்புகள் மூலம் இந்தியா முழுவதும் பணியமர்த்தல் செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இரண்டு முதல் ஐந்து வருடங்களுக்குள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அதிகபட்ச தகுதியாக இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்ப விவரங்கள்:

  • TCS வேலைவாய்ப்பு போர்ட்டலில் இருக்கும் All open requirements / opportunities தேர்வு செய்யவும்.
  • இப்போது விண்ணப்பதாரர்கள் TCS கேரியர்ஸ் போர்ட்டலை சரிபார்த்து, Rebegin பிரிவுக்கு செல்லவும்.

வங்கக்கடலில் உருவான புதிய புயல் சின்னம் – தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

  • தொடர்ந்து அந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பணியை தேர்வு செய்யவும்.
  • இப்போது Apply என்பதை கொடுக்கவும்.
  • பிறகு TCS iBegin போர்ட்டலில் ஒரு சுயவிவரத்தை உருவாக்கி வைத்துக் கொண்டால் பின்னர் அறிவிக்கப்படும் எந்த வேலைகளுக்கும் விண்ணப்பம் செய்து கொள்ள முடியும் என்பது கூடுதல் தகவல்.

திறன்கள்:

SQL சர்வர் DBA, லினக்ஸ் அட்மினிஸ்ரேட்டர், நெட்வொர்க் அட்மின், மெயின்ஃபிரேம் அட்மின், ஆட்டோமேஷன் சோதனை, செயல்திறன் சோதனை ஆலோசகர், ஆங்குலர் JS, ஆரக்கிள் DBA, சிட்ரிக்ஸ் அட்மினிஸ்ரேட்டர், ஜாவா டெவலப்பர், டாட்நெட் டெவலப்பர், ஆண்ட்ராய்டு டெவலப்பர், IOS டெவலப்பர், விண்டோஸ் அட்மின், பைடன் டெவலப்பர் மற்றும் பைலட் டெவலப்பர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!