தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை – ஷாக் ரிப்போர்ட்!

0
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை - ஷாக் ரிப்போர்ட்!

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் வியக்க வைக்கும் அளவிற்கு விற்பனை நடந்துள்ளது.

மது விற்பனை:

ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மதுபான கடைகள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மூன்று நாட்கள் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை என்பதால் மது பிரியர்கள் நேற்று முதல் டாஸ்மாக் கடைகளில கூட்டம் அலைமோத தொடங்கினர். ஒரு தனி நபருக்கு மூன்று குவாட்டர் மற்றும் ஒரு பீர் மட்டுமே வழங்க வேண்டும் என்று நிபந்தனை இருந்தது. இருப்பினும் பலமுறை சென்று மதுபான சரக்கை அதிக அளவில் வாங்கி குடிமகன்கள் குவித்துள்ளனர். இதே போல ஏப்ரல் 21ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு அன்றும் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை தினமாக உள்ளது.

NIMHANS நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறவிடாதீர்கள்!

எனவே ஏப்ரல் 20ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்படும் என்பதால் அன்று ஒரு நாள் அதிக அளவில் கூட்டம் கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் வழக்கத்தை விட இரண்டரை மடங்கு கூடுதலாக மது விற்பனை நடந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி தினசரி மது விற்பனை ரூபாய் 150 கோடிக்கு இருக்கும் என்றும், நேற்று மட்டும் ரூபாய் 400 கோடி அளவிற்கு மது விற்பனையாகி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாஸ்மார்க் விடுமுறை தினங்களில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!