தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
வெப்பச்சலனம் மற்றும் உள் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
இன்று (ஜூன் 1) தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு கணக்கீடு – ஜே.சி.எம் அறிவிப்பு!!
02.06.2021 அன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்!!
03.06.2021, 04.06.2021 அன்று வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 05.06.2021 அன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
TN Job “FB Group” Join Now
அடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகத்தில் மதுரை, திருச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, கடலூர், புதுவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை உயரக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பகல் பொழுதில் வானம் தெளிவாகவும் மாலை மாறும் இரவு நேரங்களில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் முழு ஊரடங்கில் ‘இவர்கள்’ வெளியில் செல்ல அனுமதி – அரசு அறிவிப்பு!!
அதிகபட்ச வெப்பநிலை 40 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பள்ளிப்பட்டு 5 செமீ, ஹரூர் 4 செமீ, குடியாத்தம் 3 செமீ, கள்ளிக்குடி, சின்னக்கல்லார், கொடைக்கானல் தலா 2 செமீ, உதகமண்டலம், பாப்பிரெட்டிப்பட்டி, விரிஞ்சிபுரம், நாட்றம்பள்ளி, பெனுகொண்டாபுரம், தல்லாகுளம் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
01.06.2020 முதல் 03.06.2021வரை குமரிக்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 01.06.2021 முதல் 03.06.2021 வரை கேரள கடலோர பகுதிகளில் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 01.06.2021 முதல் 05.06.2021 வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.