
தமிழக மாணவர்களின் கவனத்திற்கு.. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நுழைவு சீட்டு – பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு வருகிற 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 06 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்:
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து வழக்கம் போல பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மற்றும் பாடவாரியான தேர்வு அட்டவணையை கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன் படி தமிழகம் முழுவதும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. ஏப்ரல் 06 ஆம் தேதி தமிழ் தேர்வும், ஏப்ரல் 10 ஆம் தேதி ஆங்கிலம் தேர்வும், ஏப்ரல் 13 ஆம் தேதி கணக்கு தேர்வும், ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவியல் தேர்வும், ஏப்ரல் 17 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வும் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், 10 ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் இலவச 100 யூனிட் மின்சாரம் ரத்து? – அமைச்சர் விளக்கம்!
Exams Daily Mobile App Download
பதிவிறக்கம் செய்யும் முறை:
10 ஆம் வகுப்பு தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியான பின் மாணவர்கள் அரசு தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.dge.tn.gov.in/ என்பதில் தங்களுடைய பள்ளியின் பெயர் மற்றும் மாவட்டத்தை தேர்வு செய்து, அதில் உங்களுடைய பெயர் மற்றும் பிறந்த தேதியை கொடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது சம்மந்தப்பட்ட பள்ளிகளில் ஹால்டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.