தமிழக காவல்துறையினருக்கு 3 நாட்கள் விடுமுறை!!
தமிழகத்தில் உள்ள காவல்துறையினருக்கு, தேர்தல் பணியை தொடர்ந்து சுழற்சி முறையில் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவல்துறையினருக்கு விடுமுறை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த பணிகளில் அரசு ஆசிரியர்கள், அலுவலர்கள், பல லட்சம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் வாக்குப்பதிவு நாள் அன்று எதுவும் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கவும் வாக்கு சாவடிகளில் பணியில் ஈடுபட்டனர்.
TN Job “FB
Group” Join Now
தொடர்ந்து பணிச்சுமை காரணமாக அவர்கள் உடல் ரீதியாகவும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். எனவே அவர்களுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில் சுழற்சி முறையில் ஒவ்வொரு போலீசாருக்கும் அதிகபட்சம் மூன்று நாட்கள் வரை விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அரசு உத்தரவு!!
இது குறித்து போலீசார் கூறுகையில், “காவல் துறையினருக்கு விடுமுறையே இல்லை, இரவு பகல் பாராமல் வேலை இருக்கும். இதனால் குடும்பம், பிள்ளை, உறவினர் வீடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக தொடர் விடுமுறை நாட்கள் விடுமுறை என்பது இருந்ததே இல்லை. எனவே தற்போது இந்த விடுமுறை காரணமாக மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம்”, இவ்வாறு தெரிவித்தனர்.