தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – போக்குவரத்து மாற்றம்! காரணம் இதோ!

0
தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு - போக்குவரத்து மாற்றம்! காரணம் இதோ!
தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு - போக்குவரத்து மாற்றம்! காரணம் இதோ!
தமிழக வாகன ஓட்டிகள் கவனத்திற்கு – போக்குவரத்து மாற்றம்! காரணம் இதோ!

கோவையில் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற இருப்பதால் சில குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், எந்தந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதற்கான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சதுர்த்தி மிகவும் கோலாகலமாக நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டன. அதில் சென்னையில் மட்டுமே 5 ஆயிரத்து 501 விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு சுவாமி தரிசனம் செய்யப்பட்டது. இது தவிர வீடுகளிலும் பிள்ளையாருக்கு பலவித பிரசாதங்களுடன் வழிபாடு செய்யப்பட்டது.

ரேஷன் கடைகளில் Google Pay, PayTM வசதி? அமைச்சர் அறிவிப்பு!

மேலும், இந்து இயக்கங்கள் சாலைகள் மற்றும் தெரு சந்திப்பு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்த பின்னர் கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை ஆகியவற்றில் சிலைகளை கரைத்துவிடுவார்கள். இவ்வாறு வழிபாடு செய்த பின்னர் சிலைகளை கரைப்பதை நம்மில் இருக்கும் தீங்கு, கஷ்டங்கள், பாவங்கள் என அனைத்தும் நம்மை விட்டு நீங்கி விடும் என்பது அர்த்தமாகும். இதனால், விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் சிலைகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அனைத்து ஊர்களிலும் விநாயகர் சிலை கரைக்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், கோவையிலும் நாளை விநாயகர் சிலையை பக்தர்கள் கரைக்க இருப்பதால் விநாயகர் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஊர்வலம் நடைபெறும் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக நாளை ஊர்வலம் நடைபெறும் பகுதியில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, நாளை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், உக்கடத்தில் இருந்து பேரூர் புறவழிச்சாலை – செல்வபுரம் சந்திப்பு வழியாக வாகனங்கள் செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!