தமிழக அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்க திட்டம் – ரூ.800 கோடி ஒதுக்கீடு!

0
தமிழக அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்க திட்டம் - ரூ.800 கோடி ஒதுக்கீடு!
தமிழக அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்க திட்டம் - ரூ.800 கோடி ஒதுக்கீடு!
தமிழக அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை சீரமைக்க திட்டம் – ரூ.800 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை சீரமைப்பதற்காக சுமார் 800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக மீனவத் துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

சீரமைப்பு பணி:

தமிழகத்தில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் தற்போது திமுக ஆட்சியின் இரண்டாம் ஆண்டு சாதனைக்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திமுக சார்பில் நிறைவேற்றம் செய்யப்பட்டிருக்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதாவது, பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம், அரசு பள்ளியில் படித்து மேற்படிப்பு படிக்க இருக்கும் மாணவிகளுக்கான உதவித்தொகை, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்கள் குறித்து இந்த பொதுக்கூட்டத்தில் பேசப்பட்டது.

ரூ.2,18,200/- ஊதியத்தில் வருவாய்துறையில் வேலை – முழு  விவரங்களுடன் | உடனே விரையுங்கள்!

மேலும், தற்போது தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை சீரமைப்பதற்கான பணி நடைபெற்று வருவதாகவும் தமிழக மீன்வளத் துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்களை சீரமைப்பதற்காக சுமார் 800 கோடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இது மட்டுமில்லாமல் பொதுமக்களின் வசதிக்காக இன்னும் எக்கச்சக்கமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாகவும், பொதுமக்கள் திமுக ஆட்சிக்கு முழுக்க முழுக்க உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!