தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – பெண் வாக்காளர்களே அதிகம்!!

0
தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - பெண் வாக்காளர்களே அதிகம்!!
தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - பெண் வாக்காளர்களே அதிகம்!!
தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – பெண் வாக்காளர்களே அதிகம்!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் தற்போது தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வழக்கத்திற்கு மாறாக ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி போன்ற முக்கிய புள்ளிகள் இல்லாமல் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் பல அரசியல் கட்சிகளும் தங்களது கட்சி வெற்றி பெற பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள்- மத்திய அரசின் புதிய விதிமுறைகள்!!

இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளவை, “தமிழகத்தில் மொத்தம் 6.26 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அவற்றில் 3.08 கோடி ஆண் வாக்காளர்களும், 3.18 கோடி பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7,246 வாக்காளர்களும் உள்ளனர். முதன்முறையாக வாக்களிக்க விண்ணப்பித்தவர்கள் மொத்தம் 8,97,694 பேர் உள்ளனர். அதில் 18 முதல் 19 வயதிற்குட்பட்டவர்களில் 4.80 லட்சம் ஆண் வாக்காளர்களும், 4.16 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் – 91 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி 6,94,845 வாக்காளர்களுடன் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக உள்ளது. குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்தில் உள்ள துறைமுகம் தொகுதி (1,76,272) உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!